தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தது கமல் கிடையாது ஏனென்றால் இருவரும் வேறு வேறு பாதையில் சென்றனர் ஆனால் உண்மையில் ரஜினிக்கு போட்டியாக அப்போதைய காலகட்டத்தில் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் தான்.
என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஏனென்றால் ஒரு பக்கம் சூப்பர் ஹிட் கொடுத்தால் மறுபக்கம் விஜயகாந்த்தும் ஹிட் கொடுத்து அவருக்கு ஈடு இணையாக பயணித்தார். 90 காலகட்டங்களில் யார் நம்பர் 1 என்பதை படங்களில் மூலம் இவர்கள் போட்டி போட்டு பார்த்தனர் என்பதுதான் உண்மை.
இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அப்பொழுது வெற்றி / தோல்வி படங்களை கொடுத்து வந்ததால் யார் நம்பர் ஒன் என்பது அப்போது சரியாக சொல்லவே முடியவில்லை. மேலும் ரஜினி தவறவிடும் படங்களை விஜயகாந்த் பிடிப்பதும் விஜயகாந்த் தவறவிடும் படங்களை ரஜினி கைப்பற்றுவதுமாக அப்போதைய காலகட்டங்களில் இருந்து கொண்டுதான் இருந்தது.
அதுபோல கடந்த 2004ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் கஜேந்திரா இந்த திரைப்படத்தில் விஜயகாந்துடன் கைகோர்த்த ராதாரவி, சீதா, ரமேஷ்கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சரத்பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து இருந்தனர் இந்த படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை படமாக விஜயகாந்துக்கு அமைந்தது.
ஆனால் உண்மையில் இந்த படத்தின் கதையை சுரேஷ்கிருஷ்ணா முதலில் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் கூறி உள்ளார் ஆனால் ரஜினியோ இந்த படத்தின் முழு கதையையும் கேட்டு விட்டு சுரேஷ் கிருஷ்ணாவிடம் பாஷா படத்தின் சாயல் அப்படியே கஜேந்திரா படத்திலும் தெரிவதாக கூறி ரஜினி இந்தப் படத்தில் நடிக்க முடியாது என கூறி தவிர்த்தாராம்.