நடிகர் கார்த்திக்கு ஜோடியாக “பையா” படத்தில் முதலில் நடிக்க இருந்த டாப் நடிகை யாருன்னு தெரியுமா.? சொன்ன நம்ப கூட மாட்டிங்க..

paiya
paiya

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் மகன்கள் கால் தடம் பதித்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றனர் ஆனால் அதனை எல்லாரும் சரியாகச் செய்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான். சரியான கதை களம் மற்றும் திறமையை சரியான நேரத்தில் வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்ல பெயரை சினிமாவில் எடுக்கலாம் என்பதை செய்து காட்டி வருபவர் சிவகுமாரின் இரண்டாவது மகன் கார்த்தி.

இவர் முதல் படத்திலேயே அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி கண்களுக்கு விருந்து படைத்தவர் என்பது குறிப்பிடதக்கது. பருதிவீரன் என்ற திரைப்படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல்வேறு விதமான வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்த நடிகர்களில் ஒருவராக இவரும் இருக்கிறார்.

எப்போதும் ஒரு லைனை பிடிக்காமல் இவர் காதல் செண்டிமென்ட் ஆக்ஷன் என வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வருவதால் இவரது படங்கள் ஹிட் அடிக்கின்றன. இருப்பினும் இவர் கடைசியாக நடித்த சுல்தான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் வெளிவந்து அதை பூர்த்தி செய்யவில்லை.அடுத்தடுத்த படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். அதில் ஷங்கர் மகள் அதிதி சங்கருடன் கைகோர்த்து விருமன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல படங்களில் நடித்துவருவதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் 2010ஆம் ஆண்டு தமன்னாவுடன் இணைந்து பையா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக  இருந்து மக்களை கவர்ந்து இழுத்தது. இந்த திரைப்படம் கார்த்தி கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் முதன்முதலில் தமன்னாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையைத்தான் நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளதாம். அதுவும் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நயன்தாராவை தான் கார்த்தியின் பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் பின் தமன்னாவை களத்தில் இறக்கி விட்டார்களாம்.