டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக முதலில் யார் நடிக்க இருந்தது தெரியுமா.? பிரஸ்மீட்டில் அவரே கூறிய தகவல்..

don-movie-1
don-movie-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவர் ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார்.  இப்படிப்பட்ட நிலையில் அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது டான் திரைப்படத்தைப் பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி அன்று வெளிவந்த திரைப்படம் தான் டான். இத்திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார்.  மேலும் இத்திரைப்படத்தில் பிரியங்கா அருள்மோகன்,எஸ்ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்தது.

இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் காரணமாக ரஜினி உட்பட ஏராளமான முன்னணி பிரபலங்கள் டான் படக்குழுவினர்களுக்கு பாராட்டுகளை கூறியிருந்தார்கள்.

சினிமா வட்டாரங்களை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூட சமீபத்தில் டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு  “பெற்றோரை அவர்கள் இருக்கும் பொழுதே கொண்டாடுங்கள் என்ற கருத்தைச் சொல்லும் இந்தத் திரைப்படத்தை அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனும் இதற்கு நன்றி கூறியுள்ளார்.  இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.  அதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.  அவ்வப்பொழுது உதயநிதி ஸ்டாலின் பேசும் பொழுது நான் சில உண்மைத் தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறி விட்டு முதலில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னிடம் தான் இந்த கதையை வந்து கூறினார்கள்.

ஆனால் சில திரைப்படங்களில் நடித்து வந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.  நான் natiக்கிற இருந்தால் கூட  இத்திரைப்படம் இந்த அளவிற்கு ஹிட்டடித்து இருக்காது அந்த பள்ளிப் பருவம் மற்றும் காலேஜ் இந்த இரண்டு கேரக்டர்களுக்குமே சிவகார்த்திகேயனுக்கு மட்டும் தான் செட்டாகும் என்று கூறியிருந்தார்.