“அச்சம் என்பது மடமையடா” படத்தில் சிம்பு நடித்த கதாபத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? தெரிஞ்ச ஆச்சரியப்படுவிங்க..

simbu
simbu

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்து வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது கூட பல்வேறு திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக ரெடியாக இருக்கின்றன.

முதலாவதாக “மாநாடு” திரைப்படம் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படம் தள்ளி போய் உள்ளது.  மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு கையில் வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து மஞ்சிமா மோகன் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும்  இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் முதன் முதலில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க தான் படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறபடுகிறது. அதன் பிறகுதான் சிம்பு நடிப்பதாக தெரிய வந்துள்ளது. முதலில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிக்க இருந்தது  தளபதி விஜய் தானாம்.

ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்காமல் போனதால் அதை அடுத்து பின் சிம்புக்கு கை மாறியதாம். இந்த திரைப்படத்தில் திறன்பட நடித்த நடிகர் சிம்பு தனக்கு ஒரு வெற்றி  படமாக எடுத்துக் கொண்டார்.