ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? சொன்னா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.!

jeyam-ravi
jeyam-ravi

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் ஜெயம் ரவி இவர் பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அவ்வாறு பார்த்தால் இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பல சினிமா பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

மேலும் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி 2017 ஆம் ஆண்டு ஏ. எல் விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வனமகன் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை சயிஷா நடித்திருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததால் ஜெயம் ரவி உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே புகழ்பெற்று விலங்கிவிட்டார்.

என்று தான் கூற வேண்டும் மேலும் ஜெயம் ரவி நடித்திருந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் தான் நடிக்க இருந்ததாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஆம் யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை சூர்யா தானாம் இவரை தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க படக்குழு அணுகினார்கள்.

ஆனால் சூர்யா அப்போது படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் படத்தில் நடிக்க முடியாது என வெளியேறி விட்டாராம் அதன் பிறகுதான் இந்த வாய்ப்பு ஜெயம் ரவிக்கு சென்றது என கூறப்படுகிறது.

surya
surya

இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சூர்யா நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் இருந்தாலும் வனமகன் 2 எப்பொழுது உருவாகும் என்பதை நாங்கள் மிக ஆவலாக பார்த்து வருகிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.