நடிகர் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தது தெரியுமா.? தெரிஞ்சா தூக்கிவாரிப் போட்டு விடும்.

jeyam-ravi

வெள்ளித்திரையில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஜெயம் ரவி இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தோல்வியை சந்தித்தாலும் இவர் தொடர்ந்து தனது விடா முயற்சியினால் அடுத்தடுத்த திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான தனி ஒருவன் என்ற திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று விட்டது.இந்த திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் யாருமே எதிர்பார்க்காத விதமாக அரவிந்த்சாமி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது தான் மக்களிடையே தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் ஜெயம் ரவி மித்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கதாபாத்திரத்தில் முதலில் தளபதி விஜய் தான் நடிக்க இருந்தாராம் ஆம் தளபதி விஜய் கதை கேட்டவுடன் இந்த கதையில் ஜெயம் ரவி நடித்தால் மிகவும் அருமையாக இருக்கும் என கூறி மோகன் ராஜாவிடம் கூறியுள்ளாராம்.

jeyam ravi4
jeyam ravi4

இதனை வைத்து பார்த்த மோகன் ராஜாவும் ஜெயம் ரவியை வைத்து இந்த படத்தை எடுத்துவிட்டார் மேலும் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் அதிக ஆர்வத்துடன் நடித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.