தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வரும் ஒரு இயக்குனர் என்றால் அது கே எஸ் ரவிக்குமார் தான். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்கியது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு திரைப்படங்களும் சரித்திரத்தில் இடம்பெரும் அளவிற்கு வசூலில் கெத்து காட்டி உள்ளது.
அந்த வகையில் இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் கமர்சியல் திரைப்படமாக அமைந்தது என்றே சொல்லலாம் இந்நிலையில் சரத்குமாரை வைத்து கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கிய நாட்டாமை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜயகுமார், குஷ்பூ, மீனா, பொன்னம்பலம், மனோரமா, கவுண்டமணி, செந்தில் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் தந்தை மகன் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.
அது மட்டும் இல்லாமல் சரத்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரின் நடிப்பு பலரையும் வியக்க வைத்தது மட்டும் இல்லாமல் முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தது இவர்கள் கிடையாதாம். அதாவது விஜயகுமார் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜா தான் முதன்முதலாக நடிக்க இருந்தாராம்.
பாரதிராஜா மிக பிரபலமான இயக்குனர் மட்டும் இன்று பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார். ஆனால் இவர் நாட்டாமை திரைப்படத்தின் போது பல்வேறு காரணத்தின் காரணமாக இன்று திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இது குறித்து பாரதிராஜா அவர்கள் இந்த திரைப்படத்தை நான் மிஸ் செய்து விட்டேன் என பேட்டியில் அவர் கூறியது மட்டும் இல்லாமல் மற்றொரு முக்கியமான விஷயமும் வெளிவந்துள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் பிரபல நடிகராக வளம் வரும் பார்த்திபன் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம்.