தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனது கொடியை பறக்க விட்டு வருபவர் தளபதி விஜய் இப்பொழுது கூட இவர் நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் மட்டுமே இருக்கின்றனவாம் அதையும் வெற்றிகரமாக முடித்து விட்டு தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் விஜய்.
அந்த வகையில் விஜய் 66 படத்தை தெலுங்கு இயக்குனருடன் வம்சி உடன் கைகோர்க்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழை தாண்டி தளபதி விஜய் முதன்முறையாக தெலுங்கு பக்கம் கைகோர்க்க இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் இவர் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டையை நடத்தியதோடு விஜய்க்கு நல்லதொரு பெயரை எடுத்துக் கொடுத்த படமாக இது அமைந்தது இந்த படத்தில் சிம்ரன், மணிவண்ணன், தாமு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர்.
ஆனால் இந்த படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது விஜய் கிடையாதாம் ஆம் இயக்குனர் முதலில் இந்த படத்தின் கதையை வடிவேலு காகத்தான் தேர்வு செய்திருந்தாலும் தயாரிப்பாளர்கள் யாரும் தயாரிக்க முன்வராத காரணத்தினால் அடுத்ததாக முரளியை சந்தித்துள்ளது.
கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தை தவற விடவே கடைசியாக இந்த படம் விஜய் கிடைத்ததாம். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தளபதி விஜய்யும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்தின் வெற்றியை ருசித்தார்.