பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாவனி சந்தித்த முதல் ஆள் யார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

bhavani
bhavani

சின்னத்திரை சீரியல்களில் பல்வேறு தொடர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன அந்த வகையில் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்று சின்னதம்பி இந்த சீரியலில் ஹீரோயினாக தமிழ் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் பவானி ரெட்டி.

இந்த சீரியலுக்கு பிறகு இவர் வெள்ளித்திரையில் கால் தடம் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த வண்ணம் உள்ளார். இவரது புகைப்படங்களுக்காகவே பல்வேறு ரசிகர்கள் காத்துக் கிடைப்பார்கள்.

அந்த வகையில் புகைப்படங்கள் மூலம் மீடியா உலகில் பிரபலம் அடைந்த பாவணி ரெட்டிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடி பைனல்ஸ் வரை சென்றுள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சென்ற வாரம் தான் நிறைவு பெற்றது. இதில் ராஜு டைட்டில் வின் செய்து ரூபாய் 50 லட்சம் பரிசுத் தொகையுடன் வெற்றி பெற்றார்.

இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரியங்கா இருந்துள்ளார் மற்றும் மூன்றாவது இடத்தை பாவணி பிடித்துள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த போட்டியாளர்களுக்கு  சினிமா துறையில் பல்வேறு வாய்ப்புகள் காத்து இருக்கின்றன.

அந்த வகையில் பாவணி ரெட்டிக்கு திரைப்பட வாய்ப்புகள் வரும் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கின்றன. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாவணி முதல்முறையாக அவரது பிக்பாஸ் தோழியான இசைவாணி உடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம்.

isai vani and bhavani
isai vani and bhavani