தமிழ் சினிமாவில் பிரமாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அதை மாபெரும் ஹிட் படமாக மாற்றி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி உள்ளவர் இயக்குனர் ஷங்கர். இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றியையே சந்தித்துள்ளது.
அதன் காரணமாக அவர் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் லிஸ்டில் இன்றும் இருக்கிறார். ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்திருந்தார். தமிழில் நண்பன் என பெயர் சூட்டப்பட்டது. மெயின் ஹீரோவாக விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்த படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்ப்பை மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெற்றது மேலும் படம் அதிக நாட்கள் ஓடி அசத்தியது. நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் கைகோர்த்து ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா, சத்யராஜ், எஸ். ஜே. சூர்யா, சத்யன் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தனர்.
நண்பன் படம் விறுவிறுப்பாகவும் பார்ப்பதற்கு செம என்ஜாய்மென்ட் ஆகவும் இருக்கும். நண்பன் திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் ஆனால் உண்மையில் இந்த படத்தின் கதையை எழுதும் போது இயக்குனர் ஷங்கர்.
அந்த கதாபாத்திரத்தில் நடிகர் நகுலை முதலில் மனதில் வைத்து தான் எழுதி உள்ளார். பின் அவரை நாடிய போது அவர் சில காரணங்களால் நடிக்க முடியாது என கூற அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்க வைத்து அவரும் சிறப்பாக நடித்து அசத்தினாராம்.