பிரபுதேவா நடித்த “காதலன்” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா.?

kadhalan
kadhalan

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர்  இயக்குனர் ஷங்கர். சினிமாவுலகில் இருக்கும் டாப் நடிகர்கள் பலரும் இப்போ இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க தற்போது கியூவில் நிற்கின்றனர்.

என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஷங்கரின் படத்தில் நடிக்க முடியாது என ஒரு சில நடிகர்கள் மறுத்துள்ளனர். அந்த வகையில் இயக்குனர் ஷங்கரின் முதல் திரைப்படம் ஜென்டில்மேன் அதனைத் தொடர்ந்து காதலன் என்னும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு மற்றும் பலர் நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர் இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி முதலில் வேற ஒரு ஹீரோவை தான் தேடி வந்தார் இயக்குனர். அந்த வகையில் நடிகர் பிரசாந்த் தான் முதலில் அணுகியுள்ளார். அப்போது பிரசாந்த் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான “திருடா திருடா” என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த காரணத்தினால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது பின் இயக்குனர் ஷங்கர் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவை கமிட் செய்தார். படத்தின் கதைக்களம் வேற லெவலில் விறுவிறுப்பாகவும் இருந்ததால் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தின் வெற்றியைப் பார்த்த நடிகர் பிரசாந்த் அடுத்த தடவை சங்கர் வந்தால் அந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது கணக்குப் போட்டுக் இருந்தார். அதன்படி ஷங்கரின் அடுத்தப் படமான ஜீன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.