“வலிமை” திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் யார் தெரியுமா.?

ajith
ajith

அண்மையில் உலகம் முழுவதும் கோலாகலமாக வெளிவந்த அஜித்தின் வலிமை திரைப்படம் தற்போது திரை அரங்கில் மக்கள் கூட்டத்தை அள்ளி வருகின்றன. அஜித் நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து வெளிவந்த வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய ஹெச் வினோத் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து இந்த வலிமை திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளனர். மேலும் இந்தத் திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஹீமா குரோஷி, கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ், விஜே மகேஸ்வரி, சைத்ரா ரெட்டி போன்ற பல பிரபலங்கள் இணைந்து உள்ளனர்.

இந்த திரைப்படம் தற்போது வெளிவந்த மூன்றே நாட்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த வலிமை திரைப்படம் முதல் நாள் வசூலில் இதுவரை வந்த தமிழ் திரைப்படங்களை பின்னுக்குத்தள்ளி முதல் நாள் அதிக வசூலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் இந்தப் படத்தில் அஜித் உடன் சேர்த்து ஹீமா குரோஷி, கார்த்திகேயா போன்ற முக்கிய பிரபலங்களின் நடிப்பை பற்றியும் ரசிகர்கள் பெரிதும் பேசி வருகின்றனர். இதனிடையில் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள கார்த்திகேயாவுக்கு முன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருந்தது வேறு பிரபலமாம்.

ஆம் அந்த வகையில் நடிகர் பிரசன்னா தான் இந்த திரைப்படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தாராம் அப்போது சில காரணங்களால் பிரசன்னாவால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் பின்பு கார்த்திகேயாவை படக்குழு புக் செய்துள்ளது.