மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்களை ரசிகர்கள் வருஷம் அந்த திரைப்படத்தை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்தவகையில் இயக்குனர் செல்வராகவன் செவன் ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தை மிக சூப்பராக மக்களுக்கு கொடுத்து அசத்தி இருந்தார் இந்த திரைப்படத்தில் ரவிக் கிருஷ்ணன், சோனியா அகர்வால் போன்ற பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இதன் பிறகு அவர்கள் இருவருக்கும் சினிமா உலகில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்க காரணமாக இந்த படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செவன் ஜி ரெயின்போ காலனி படம் வெளியாகி இதுவரை 15 வருடங்கள் தாண்டி உள்ளதை எடுத்து ரசிகர்களும் மக்களும் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் மற்றும் நடிகர் ரவிக்கிருஷ்ணன் இருவரும் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தனர் அதில் அவர்கள் இந்த படம் குறித்தும், நடிகர் நடிகைகள் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் கூறும்போது செவன் ஜி ரெயின்போ காலனி படத்தின் கதையை நான் கேட்பதற்கு முன்பாகவே ஒரு சில நடிகர்கள் கேட்டு விட்டனர்.
முதலில் சூர்யா அதன் பிறகு மாதவன் ஆகியோர் தான் இந்த படத்தின் கதையை கேட்டனர் ஆனால் இருவருமே அப்போது மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த திரைப்படத்தில் அவர்கள் நடிக்க முடியாமல் போனது அதன்பிறகு தான் நான் கமிட் ஆனேன் என குறிப்பிட்டு பேசினார்.
நடிகை சோனியா அகர்வால் கதாபாத்திரத்தில் முதலில் அவருக்கு பதிலாக நடிகை இருந்தது சுவாதி தான். படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டே இருந்தது திடீரென அவர் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்க சென்றதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார் பிறகுதான் நடிகை சோனியா அகர்வால் கமிட் ஆனார் என்று கூறினார்.