தமிழ் சினிமா உலகிற்கு பல சிறந்த படங்களை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம் கடந்த சில வருடங்களாக பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தை உருவாக்கி வந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற பல முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படம் முதல் மற்றும் இரண்டாவது பாகம் என இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தின் போஸ்டர்கள் சில சமூக வலைதள பக்கங்களில் உடனுக்குடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியது அதைத் தொடர்ந்து நேற்று பொன்னியன் செல்வன் முதல் பாகத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரென்டாகி வருகின்றன.
இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் பட குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் படம்.
இதற்கு முன் வெளிவந்து அதிக வசூல் செய்த RRR, கே ஜி எஃப் 2 ஆகிய படங்களின் வசூலை சாதாரணமாக அள்ளி இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் திரிஷா நடித்த குந்தவி கதாபாத்திரத்தின் ரோல் முதலில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தான் சென்றதாம்.
அவர் அப்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்ததால் இந்த பட வாய்ப்பை வேண்டாம் என சொல்லிவிட்டாராம் பின்பு தான் இந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு சென்றது என கூற வருகின்றனர். தற்பொழுது இந்த படத்தின் டீசரை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு சிறந்த பட வாய்ப்பை மிஸ் செய்து விட்டாரே என விமர்சித்து வருகின்றனர்