உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் எப்போதுமே ஒரு புதுமையை கொடுக்கக்கூடியவர். அவரது படங்களில் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம் இனி வருகின்ற படங்களிலும் அதை செய்ய அவர் ரெடியாக இருக்கிறார் இப்படி திரை உலகில் ஓடிக் கொண்டிருக்கும் கமலஹாசன் 2004 ஆம் ஆண்டு இயக்கி நடித்த திரைப்படம் விருமாண்டி.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட் கலந்த ஒரு திரைப்படம் ஆக உருவாக்கியது படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடியது கமலுடன் இந்த படத்தில் கைகோர்த்து பசுபதி, அபிராமி, ரோகினி, நெப்போலியன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்திருந்தனர்.
விருமாண்டி படம் இப்பொழுதும் பலருக்கும் பிடித்த ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விருமாண்டி திரைப்படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது அதாவது விருமாண்டி படத்தில் வில்லனாக பசுபதி சூப்பராக நடித்திருப்பார் ஆனால் உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது வேறு ஒருவர் தானாம்.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பசுபதி வில்லனாக நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது எம்ஜிஆர் வழியை பின்பற்றி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ராமராஜன் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம் ஆனால் சில காரணங்களால் அப்பொழுது ராமராஜன்.
அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போக பின் கமல் அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் பசுபதியை கமிட் செய்து நடிக்க வைத்தாராம். நடிகர் பசுபதியையும் நாம் சும்மா சொல்லிவிடக்கூடாது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல பிரமாதமாக நடித்து வெற்றி கண்டார். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.