தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு நடிகைதான் நயன்தாரா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுமார் ஏழு வருடங்களாக விக்னேஷ் சிவன் என்ற இயக்குனரை காதலித்து வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் .
இவ்வாறு இவர்கள் இருவருக்கும் காதல் உருவாக வழிவகுத்த திரைப்படம் என்றால் அது நானும் ரவுடிதான் என்ற திரைப்படம்தான் இந்த திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றியதன் மூலமாக இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இதனை தொடர்ந்து அவர்கள் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது மட்டுமில்லாமல் அதன் மூலம் பல்வேறு திரைப்படங்களையும் வெளியிட்டு வெற்றி கண்ட நிலையில் தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தையும் இதன் மூலமாக வெற்றி கண்டுள்ளார்கள்.
இது ஒரு பக்கமிருக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது காலை பத்து முப்பது மணி அளவில் மிக பிரம்மாண்டமாக முடிவடைந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் இந்த திருமணத்தில் நயன்தாரா கழுத்தில் தாலிகட்ட தாலி எடுத்துக் கொடுத்தது யார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வந்த நிலையில் இந்த செயலை செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என தற்போது வெளியாகி உள்ளது.
இவ்வாறு வெளி வந்த தகவலின் படி ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டாருக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் செய்த நற்செயலை கொண்டாடி வருகிறார்கள்.