தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது.
வெகுநாட்களாக பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில். ட்ரைலர் வெளியானதும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள் இந்தநிலையில் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் இருபத்தி ஒன்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
அதுமட்டுமில்லாமல் டிரைலர் வெளியான நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு சாதனையைப் படைத்து வந்தது இந்த நிலையில் இதற்கு முன் வெளியாகிய அனைத்து முன்னணி நடிகர்களின் டிரைலர்களின் சாதனைகளை பீஸ்ட் டிரைலர் முறியடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் டிரைலரில் முகமூடி அணிந்து வந்த பிரபல நடிகர் யார் என்று தற்போது தெரியவந்துள்ளது. ட்ரெய்லரில் ஒருவர் முகமூடி அணிந்துகொண்டு முறைத்து பார்ப்பார் இவர் யார் என்று பலரும் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது விடை கிடைத்துள்ளது.
முகமூடி அணிந்த நடிகர் பிரபல மலையாள நடிகரான ஷைம் டாம் சாக்கோ என்ற மலையாள நடிகர் முகமூடி அணிந்து வில்லனாக நடித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஸ்டோரில் அவரே அந்த புகைபடத்தை வைத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.