விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் அண்மையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் உடனடியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மாறுதலாக இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்த பிக்பாஸ் ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலர் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் மக்கள் எதிர்பார்த்த பிரபலங்களே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் அனிதா சம்பத், ஜூலி, சினேகன், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, ஷாரிக், சுருதி, அபிராமி, வனிதா, தாமரைச்செல்வி, நீருப், அபிநய், சுஜா வருணி போன்ற 14 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இனியும் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்ப படுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சில வாக்குவாதங்களும் அப்பப்போ தென்பட்டு வருகிறது.
இதனிடையில் பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே நாமினேஷன் நடைபெற்ற நிலையில் ஒரு போட்டியாளர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவாரா அல்லது முதல் வாரத்தில் எவிக்ஷன் நடைபெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று அபிநய் கடைசி இடத்தில் உள்ளார்