கமலஹாசனுக்கு நடிப்பைக் கற்றுக் கொடுத்தது யார் தெரியுமா.? ஆஸ்கார் விருது எல்லாம் அந்த மனுஷனுக்கு சர்வ சாதரணம்.!

kamal
kamal

சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் பிரபலங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் 70, 80  காலகட்டங்களில் சிவாஜி, எம்ஜிஆர் முன்னணி உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க காரணம் அவரது சிறந்த நடிப்பு தான். அவரது ரசிகர்களும் அதை உணர்ந்து  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்கள்.

அதனால் தான் இன்றுவரை அவர்களைப் பற்றிப் பேசி வருகிறோம் அவர்களை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் பின்னி பெடல் எடுக்க கூடியவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதில் கை தேர்ந்தவர் உலகநாயகன். அதனால் இவரது படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

தற்போதுகூட லோகேஷ் உடன் கைகோர்த்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் வெகுவிரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது. சினிமாவுலகம் புதியதை நோக்கி நகர நகர பல்வேறு புதியதை கற்றுக்கொள்ள நடிக்கும் நடிகர்களில் ஒருவர் கமலும் என்பதும் குறிப்பிடத்தக்கது . அதனால் புதியதை எப்பொழுதுமே விரும்பக்கூடிய ஒரு மனிதராக இருக்கிறார்.

கமலஹாசனிற்கு வயதானாலும் நடிப்பில் மட்டும் அவருக்கு ஈடுப்பாடு குறையாமல் இருக்கிறது. அதனால் அவரது படங்களில் அவரது நடிப்பு வேற லெவலில் பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட உலக நாயகன் கமலஹாசனுக்கு நடிப்பைக் கற்றுக் கொடுத்தது யார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது .

அந்த நடிகர் வேறு யாருமல்ல ஹாலிவுட் நடிகர் அல் பசினோ தான் இவர் கமலுக்கு குருவாம் இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த காட்பாதர், ஹிட் தி ரெக்ரூட் பல்வேறு படங்களில் அற்புதமாக நடித்து அசத்தியுள்ளார் இதற்காக அவர் ஆஸ்கார் விருது தொடங்கி பல்வேறு விருதுகளை தன் வசப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரை நடிப்பு பல்கழைக்கழகம் எனவும் பலர் கூறி வருகின்றனர். கமலஹாசனே நடிப்பில் பின்னி பெடல் எடுப்பார் அவரது குரு சொல்லவே வேண்டாம் நடிப்பில் ஒரு அரக்கனாக வாழ்ந்து வருகிறார்.