உயிருக்கு போராடி கொண்டுயிருக்கும் போது எஸ்.பி.பி யாரை பார்க்க முதலில் ஆசைப்பட்டார் தெரியுமா.? கண்கலங்க வைக்கும் செய்தி.

s.p-balasubramaniyam

சினிமா உலகில் சிறந்த படைப்புகளை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டால் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அந்தவகையில் சாதித்த ஒவ்வொரு பிரபலங்களையும் தலையில் தூக்கி வைத்து தான் கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் தற்போது மக்கள் மனதிலிருந்து நீங்காமல் இருப்பவர்தான் எஸ்பிபி.

90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு சினிமாவுக்கு பாடி தனது திறமையை நிரூபித்தவர். அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது எஸ்பிபி தான் அந்த அளவுக்கு மெல்லிசையில் அவரது பாடல் மிகவும் அருமையாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் அவர் நம்முடன் தற்போது இல்லை என்பது குறிப்பிடதக்கது சமீபகாலமாக கொரோனா தாக்கத்தால் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் பலரும் இருந்தாலும் அவர்களில் ஒருவர் எஸ்பிபி இவரது முதலாவது நினைவு நாள் வந்தது அதனையொட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் அவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஒரு சில பிரபலங்கள் நினைவு நாளில் கலந்து கொண்டு அவருக்கு பிராத்தனை செய்ததோடு அவரை பற்றி பேசினார்.

அந்த வகையில் இளையராஜா பேசும்போது ஸ்ரீ பாலசுப்பிரமணியம் எனக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் மருத்துவமனையில் அவர் இருக்கும் போது கூட என்னை மட்டுமே அவர் பார்க்க விரும்பி உள்ளார்.

அவர் போனில் இருந்த என்னுடைய புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்துள்ளார். இதிலிருந்தே தெரிகிறது அவரது மனதில் நான் எவ்வளவு இடம் பிடித்துள்ளேன் என்பது பற்றி உருக்கமாக பேசினார் இளையராஜா. இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பார்த்தவர்கள் பலரும் கண் கலங்கி போனார்கள்.