ஒருகாலத்தில் அஜித்-விஜய்-கே டாஃப் கொடுத்த பிரசாந்த்..! அவரின் மனைவி யார் தெரியுமா.? அவர் எப்படி பிரசாந்தை ஏமாற்றி திருமணம் முடித்தார் தெரியுமா.?

prasanth

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அஜித், விஜய் வருவதற்கு முன்பு பிரசாந்த்  தான் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருந்தார், இவருக்குப் பிறகுதான் அஜித், விஜய் எல்லாம், அப்படி ஆகா ஓகோ என்று இருந்த பிரசாந்த் தற்போது தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வைகாசி பிறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வளம் வந்தார், இவரை அப்பொழுது சாக்லேட் பாய் என்று தான் அழைப்பார்கள், அந்த அளவிற்கு பெண்கள் ரசிகர் கூட்டம் அதிகம்.

இவர் 2003 ஆம் ஆண்டு வெளியாகிய வின்னர் திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு ஹிட் திரைப்படமும் கொடுக்க முடியாமல் தவித்து வந்தார் இந்த நிலையில் எப்பொழுதாவது சினிமாவில் தலைகாட்டி வருகிறார் பிரசாந்த். பிரசாந்த் தொழில் அதிபரின் மகள் கிரகலட்சுமி உடன் 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது, ஆனால் கிரக லட்சுமிக்கும் வேணு பிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது, அதுமட்டுமில்லாமல் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்துள்ளது அனைத்தையும் மறைத்து கிரகலட்சுமி பிரசாந்தை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கிரகலட்சுமி மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றம் ஐகோர்ட்டுக்கு மாற்றி திருமணம் செய்ததை உறுதி செய்து அவர்கள் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தனக்கு திருமணம் ஆனது விவாகரத்து வழங்குமாறு கிரகலட்சுமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

prashanth
prashanth

மேலும் பிரசாந்த் மீது சொத்து மோசடி வழக்கு என அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் அந்த குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பதை வழக்கறிஞர்கள் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என கூறிவிட்டார்கள் இந்த நிலையில் பிரசாந்த் அவரது மனைவியை இன்றுவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

prashanth