தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் நல்ல நல்ல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதன்பிறகு வெற்றி திரைப்படத்திற்காக இயங்கிய நடிகர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர் இவர் சமீபத்தில் பா விஜய் இயக்கத்தில் நடித்த சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.
இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது அமேசான் தளத்தில் வெளியானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் ஆர்யாவிற்கு இந்த திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் கபிலன் மற்றும் டான்சிங் ரோஸ் வேம்புலி வாத்தியார் போன்ற கதாபாத்திரம் மிகவும் சிறந்தது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் பசுபதி. இவர் இந்த திரைப்படத்தில் ஒரு தீவிர திமுக தொண்டனாக நடித்திருப்பார் என்பது அப்பட்டமாக இந்த திரைப்படத்தின் இயக்குனர் காட்டியிருப்பார்.
அதேபோல இந்த திரைப்படத்தில் நடிகர் பசுபதிக்கு மனைவியாக கீதா கைலாசம் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த நடிகையை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது என்று சொல்லலாம்.
இவர் பிரபலமான நமது நடிகை பிரபல இயக்குனர் கே பாலசந்தர் அவர்களின் மகன் கைலாசத்தில் மனைவி கீதா கைலாசம் தான். அதாவது கே பாலச்சந்தரின் மருமகள் ஆவார். இவர் மேடை நாடகங்களை அரங்கேற்றியது மட்டுமில்லாமல் தற்போது தன்னுடைய கணவர் மறைந்த பிறகு மின்பிம்பங்கள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.