தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.
பொதுவாக லோகேஷ் எடுக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்கும்படி இருப்பது மட்டுமில்லாமல் ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தன.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கமலஹாசனின் மருமகளுக்கு துணையாக நடித்த வேலைக்கார பெண் காளியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் திடீரென ஆக்ஷன் காட்சியில் பட்டையை கிளப்பியது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இவ்வாறு இவருடைய சண்டைக்காட்சியை பார்த்த பலரும் இவர் ஹாலிவுட் அல்லது பாலிவுட் நடிகையாக இருப்பார்கள் என அனைவரும் நினைத்தார்கள்.
ஆனால் அதன் பிறகுதான் லோகேஷ் கனகராஜ் தந்திரம் புரிந்தது இவர் பல்வேறு அஜித் மற்றும் விஜய் படங்களில் குரூப் டான்சராக நடித்தவராவார் இவருடைய பெயர் வசந்தி. ஆனால் இவருக்கு ஸ்டாண்ட் மற்றும் சண்டைக் காட்சிகளில் அதிக அனுபவம் உண்டு இதனை தெரிந்துகொண்ட லோகேஷ் இவரை இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
அந்த வகையில் விக்ரம் திரை படத்தில் இவருடைய கதாபாத்திரம் ஏஜென்ட் டீனா என்பதுதான் இவ்வாறு இவருடைய கதாபாத்திரம் தியேட்டரில் திரையிடப்பட்டபோது ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் இருந்தது மட்டுமில்லாமல் இவர் சண்டையிட்ட ஐந்து நிமிட காட்சி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
பொதுவாக விக்ரம் திரைப்படம் முழுவதும் ஒவ்வொன்றும் எதிர்பாராத விதமாக அமைந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது என்றே சொல்லலாம்.