தல அஜித் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கலைத்தாலும் அவரது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மட்டும் உச்சத்தில் இருக்கிறது காரணம் அவர் சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் தன் வேலை உண்டு, தன் சேவை என தனது கடமையில் சரியாக இருப்பாதால் மக்கள் அவரை பின்பற்றுவதோடு பொது இடத்தில் பார்த்தாலும் கொண்டாடும் செய்கின்றனர்.
இதனால் இளம் தலைமுறை ரசிகர்களும் அஜித்தை உச்சியில் வைத்து அழகு பார்க்கின்றனர். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும் படியும் வசூலும் அதிகம் அள்ளுவதால் வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியது.
பல வருடங்களாக அப்டேட்டை வெளியிடாமல் இருந்த படக்குழு சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிவற்றை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட செய்தது. அதன் பிறகும் வலிமை படத்திலிருந்து அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றனர்.
அந்த வகையில் வலிமை படத்தில் அஜீத் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜீத்தின் தங்கையாக ஒருவர் நடித்திருக்கிறார் அவர் பார்ப்பதற்கு தமிழ் சினிமாவில் புது முகம் ஒன்று உங்களுக்கு தோன்றலாம் ஆனால் அவர் இதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் பல்வேறு சாமி படங்களிலும் அம்மன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடதக்கது.
90 காலகட்டங்களில் பல்வேறு விதமான அம்மன் மற்றும் சாமி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தான் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார் அவரது உண்மையான பெயர் சுனைனா பாதாம்.