சின்னத்திரையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கப்பட்டு சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து முதல்முறையாக தமிழ் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டார். நமிதா மாரிமுத்து நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர் திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர். மேலும் இவர் சமுதாயத்தில் நடக்கும் சில பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது மற்றும் ஏழை எளியவர்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்வது போன்ற தொண்டுகளை செய்து வருகிறார். இவர் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு அதில் நடந்த முதல் டாஸ்கில் இவரது வாழ்க்கை பயணத்தை பற்றி வெளிப்படையாக கூறியிருந்தார்.
மேலும் திருநங்கைகள் படும் கஷ்டங்கள் பற்றியும் கூறியிருந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களும் திருநங்கை என்ற காரணத்தினால் அவரை ஒதுக்காமல் சகஜமாகப் அவரிடம் பழகினார்.ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஏழு நாட்களிலேயே இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவரை தொடர்ந்து நாடியா சாங், அபிஷேக், சின்னபொண்ணு போன்றோர் வெளியேறினர். மேலும் சென்ற வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த வாக்குகளை பெற்று சுருதி வெளியேறினார். சுருதி வெளியேறியதற்கு முக்கிய காரணம் தாமரையின் காயினை எடுப்பதற்காக பாவனியுடன் சேர்ந்து தவறான செயலை பயன்படுத்தியது தான்.
தற்போது சுருதி வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர் சமூக வலைதள பக்கத்தில் முதன் முறையாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திருநங்கை நமிதா மாரிமுத்துவுக்கு கன்னத்தில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதோ அந்த புகைப்படம்.