காலத்திற்கு ஏற்றவாறு இயக்குனர்கள் தனது திறமையை மாற்றிக்கொண்டு சிறப்பான கதைகளை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் எடுத்தவுடனேயே பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் சமீபத்தில் கூட விஜயை வைத்து மாஸ்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாக கார்த்தியுடன் கைகோர்த்த 2019ஆம் ஆண்டு கைதி என்ற படத்தை கொடுத்து இருந்தார இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது.
அதிலும் குறிப்பாக இந்த படத்தில் காதல் போன்றவற்றிக்கு வாய்ப்பே இல்லை மேலும் படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது எண்பது தான் படத்தின் ஹைலைட் இப்படி இருந்தும் படம் விறுவிறுப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் கார்த்தி மற்றும் லோகேஷ் கேரியரில் ஒரு நல்ல படமாக அமைந்தது மேலும் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தில் கார்த்தி தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஆனால் லோகேஷ் கனகராஜ் வில்லன் மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் இந்த படத்தின் கதையை எழுதி இருந்தாராம். ஆனால் அந்த பிரபலத்தை நடிக்க வைக்க ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் நடிகர் கார்த்திக்கு முன்பாக வேறு ஒரு நடிகரை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தாராம் அந்த நடிகர் வேறு யாருமல்ல விஜய்சேதுபதி தானம். பொழுது அந்த படத்தை அவர் மிஸ் செய்து விட்டார் பின் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை எடுத்து இருந்தார்.