தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சீயான் விக்ரம் தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு படத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பதில் வல்லமை உடையவர் மேலும் ஏராளமான திரைப்படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளார்.
மேலும் சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களுடன் ஜாலியாக பழகுவதால் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதனை மிகவும் சுவாரசியமாக எடுத்துச் சென்று அனைவரையும் கலாய்ப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தற்பொழுது வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இந்த திரைப்படம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய காரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி அன்று வெளியாக இருப்பதால் தற்பொழுது பட குழுவினர்கள் ப்ரோமோஷன் வேலையில் தீவிரமாக இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து விக்ரம் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார் அந்த திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விக்ரமின் தந்தை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகர் விக்ரம் தன்னுடைய மகனை சினிமாவிற்கு அறிமுகமாக்கியுள்ள நிலையில் அவரும் தொடர்ந்து படங்களை நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலும் பலருக்கும் விக்ரமின் தந்தை யார் என தெரியாது.மேலும் அவர் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் கன்னடம், தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்த வருகிறார் மேலும் நடனம், பாடல் பாடுவதிலும் சிறந்த விளக்குகிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி, திருப்பாச்சி போன்ற ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலம் குறைவால் உயிர் இழந்தார்.