“வலிமை” படம் வெளியாகாததால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் டாப் நடிகர்- யார் அது தெரியுமா.?

valimai-
valimai-

வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக பொங்கலன்று அதாவது ஜனவரி 13ம் தேதி உலக அளவில் வெளியாகும் என படக்குழு முடிவு செய்தது அதனை முன்னிட்டு கூட பல்வேறு அப்டேட்களை கூட தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

இதனால் சினிமா உலகமே வலிமை படம் வெளியாவது உறுதி என நம்பிய நிலையில் புதிதாக பரவி வரும் வைரஸ் காரணமாக பல்வேறு இடங்களில் கடுமையான தடைகளையும்,  கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசு.

அதிலும் முக்கியமாக திரையரங்கில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி என கூறியது. ஆனால் அஜித்தோ வலிமை திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் வந்தால் அவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் அதனால் அவர்களது குடும்பங்கள் பெரிதளவு இழப்பை சந்திக்கும் என கருத்தில் கொண்டு வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகாது என ஒரு வழியாக பின்வாங்கியது.

வலிமை படத்துடன் பொங்கலுக்கு விஷால் நடிப்பில் உருவான வீரமே வாகை சூடும் திரைப்படம் மோதும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது வலிமை படம் பின்வாங்கி உள்ளதால் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பொங்கல் ரேஸில் சோலோவாக களமிறங்கி உள்ளது. மேலும் போட்டியின்றி வீரமே வாகை சூடும் திரைப்படம் தற்போது வரை இருப்பதால்   விஷால் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.

இந்த திரைப்படத்தை து. ப. சரவணன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் யோகிபாபு, பில்லி முரளி, மாரிமுத்து,  ரவீனா, மகா காந்தி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தியுள்ளனர். வீரமே வாகை சூடவா படத்தின் டிரைலர் கூட அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது தற்பொழுது தனியாக வெளியாக  உள்ளதால் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ள வீரமே வாகை சூடும் படம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது