தமிழ் சினிமா உலகில் இயக்குனர்களை பொறுத்தவரை அவர்கள் இயக்கும் அபூர்வமான கதைக்கும் வித்தியாசமான முறையில் நடிகர்களை நடிக்க வைப்பதால் அவர்களுக்கு அதற்கு ஏற்ற மாதிரி சம்பளம் தருவார்கள் என்பது தெரிந்தது தான்.
அதிலும் குறிப்பாக இந்திய திரையுலகில் அதிக சம்பளம் என்ற பட்டியலில் இந்தி, தெலுங்கு,தமிழ் ஆகியவை தான் முதலிடத்தில் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
தென்னிந்திய அளவில் சம்பளம் வாங்கும் இயக்குனர் என்றால் பாகுபலி படம் திரையரங்குக்கு வருவதற்கு முன் இயக்குனர் ஷங்கர்தான் அதிக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.
ஆனால் பாகுபலி படம் மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களை இயக்கிய ராஜமௌலி ஷங்கரை விட அதிக சம்பளம் வாங்கி விட்டார் என்றே கூறலாம் இவர் பாகுபலி படத்தை திரையரங்கில் வெளியிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்ததுமட்டுமல்லாமல் அந்த திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்காக சுமார் 75 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் ஆனால் இந்தியன் திரைப்படத்திற்காக ஷங்கர் 40 கோடி தான் சம்பளம் பேசி உள்ளதாக நிறுவனமே தெரிவித்திருந்தது.
அதையடுத்து தெலுங்கு திரைப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர் அதே 40 கோடி சம்பளம் அல்லது கூடுதலாக 5 கோடி வரை பேசி இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர்களை விட நடிகர்கள் யார் யார் அதிக சம்பளம் வாங்கி உள்ளார்கள் என்று பார்த்தால் 100 கோடிக்கும் மேல் பாகுபலி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் வாங்கியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ஏன் சங்கர் இப்படி சம்பளம் குறைவாக வாங்குகிறார் அவர் கதைக்கு ஒர்த் இல்லையா என கூறி வருகிறார்கள்.