தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்டம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ் ராஜ். லோகேஷ் தனராஜ் தொடர்ந்து வெற்றி தரும் படங்களை இயக்கி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்த திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தின் மூலம் இவரின் புகழ் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து மாநகரம் மற்றும் கைதி போன்ற அதிக பட்ஜெட் உள்ள படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வசூல் வேட்டையை செய்ததால் மற்ற மொழியிலும் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படமும் ரீமேக் செய்யப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இவர் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு வேற லெவலில் மாறி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போழுது தேர்தல்,பிரச்சாரம் என்று மிகவும் பிஸியாக கமல் இருப்பதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தள்ளிப் போட்டு உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தளபதி 66, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்பொழுது தமிழ் நடிகர்களுக்கு டாட்டா காண்பித்துவிட்டு லோகேஷ் கனராஜ். தெலுங்கில் பிரபல முன்னணி நடிகராக ஜொலித்து வரும் பிரபாஸின் திரைப்படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு 2022-யில் இருந்து தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்கள். விரைவில் இதனை பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.