சினிமா உலகில் திறமையை நிரூபிக்கும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான விருதுகள் கொடுத்து அழகு பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் நடிகைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான விருதுகள் கொடுக்கப்படுகிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்கள் பலரும் சினிமா உலகில் பல்வேறு விதமான விருதுகளை அள்ளி உள்ளனர். அதிலும் குறிப்பாக உலக நாயகன் கமலஹாசன் படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை குறைத்தும், ஏத்தியும்..
அந்த கதாபாத்திரமாகவே வாழ்வதால் அவர் அதிக விருதுகளை தட்டி தூக்கிய நாயகனாக பார்க்கப்படுகிறார். இவர் அண்மையில் நடித்த விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கி உள்ளது. இந்த படமும் கமலுக்கு பல்வேறு விருதுகளை பெற்றுத்தர ரெடியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அதிக விருதுகளை கைப்பற்றி உள்ள கமலஹாசனையே ஒருவர் முந்தி உள்ளார்.
அந்த சினிமா பிரபலம் வேறு யாரும் அல்ல இந்தி சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திர நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் தான். இவர் தனது சினிமா பயணத்தை 70 கால கட்டங்களில் ஆரம்பித்தார். அப்போதிலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர்.
நடிகர் அமிதாப்பச்சன் தான் இவர் இதுவரை 27 விருதுகளை தட்டி தூக்கி உள்ளார். இவர் சினிமா உலகில் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி பின்னணி பாடகர் தயாரிப்பாளர் தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இவர் இருந்து வருகிறார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.