பொன்னியின் செல்வன் – 1 படத்தில் “அதிக சம்பளம்” வாங்கிய பிரபலம் யார் தெரியுமா.?

ponniyin selvan
ponniyin selvan

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் எவ்வளவு வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அவர் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கத்தான் ரொம்பவும் ஆசைப்பட்டார். அதுதான் அவரது கனவு படம் கூட பலமுறை இந்த படத்தை எடுக்க அவர் நினைத்தாலும் அதில் தோல்வியை சந்தித்தார் ஆனால் கடைசியாக பக்கா பிளான் போட்டு பெரிய தயாரிப்பு நிறுவனத்தை பிடித்து..

ஒரு வழியாக பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் இருந்து பல்வேறு அப்டேட்டுகள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் மற்றும் பல பிரபலங்களான விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு மணி 50 நிமிஷம் ரன்னிங் டைம் என்ற தகவலும் அண்மையில் கிடைத்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளன. அதன்படி விக்ரம், ஐஸ்வர்யாராய் போன்ற சீனியர் நடிகர்கள் இருந்தாலும் இந்த படத்தில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகராக ஜெயம் ரவி பெயர் தான் இடம்பெறுகிறது.

அதாவது இந்த படத்தில் மெயின் ஹீரோ அருள் மொழி வர்மன் தான் அந்த கதாபாத்திரத்தில் தான் ஜெயம் ரவி நடித்துள்ளார் மேலும் அவருக்கு தான் காட்சிகள் அதிகம் என்பதால் அவர்தான் இந்த படத்தில் அதிக ரோலில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது அதனால் தான் அவருக்கு அதிகம் சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் என ஒரு தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.