டைட்டில் வின்னர் ஆரிக்கு பிடித்த பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் யார் தெரியுமா.? அவரே சொன்ன சூப்பர் தகவல்.

AARI
AARI

உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 5 சீசன் 72 நாட்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியையும் அவர் சீரும் சிறப்புமாக சனி, ஞாயிறுகளில் தொகுத்து வழங்கி மக்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பிக பாஸ் சீசன் 4- ல் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற நடிகர் ஆரியிடம் பிக்பாஸ் சீசன் 5 இல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு யார் என கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த நடிகரும் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் ஆரி கூறியது : பிக்பாஸ் சீசன் 5 – ல் அனைத்து போட்டியாளர்களும் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தனது தனித் தன்மையுடன் விளையாடி வருவதால் யார் வெற்றியாளர் என்பது கணிக்க முடியவில்லை மேலும் ஒவ்வொருவரும் எந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை காலையில் சண்டை போடுகிறார்கள் மாலையில் ஒன்றாக பேசி இணைந்து கொள்கிறார்கள்.

அதனால் யாரையும் இதுவரை கணிக்க முடியாமல் இருந்து வருகிறது. இதனால் என்னை பொருத்தவரை மனம் கவர்ந்த ஒரு போட்டியாளரை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய பிக்பாஸ் ஆரி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறேன் அது உற்சாகத்தை கொடுத்துள்ளது என அவரே கூறியது.

தற்போது பிக்பாஸ் மற்றும் அவரது ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. நடிகர் ஆரி தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் அந்த திரைப்படங்கள் தற்போது வரையிலும் வெளியாகாமல் இருப்பது தான் அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.