பிக் பாஸில் கலந்து கொண்டுள்ள மகேஸ்வரியின் முன்னாள் கணவர் யார் தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்

maheshwari

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து  தொகுப்பாளனியாக வலம் வந்தவர் மகேஸ்வரி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது அதுமட்டும் இல்லாமல்  ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி போர் அடிக்காமல் தொகுத்து வழங்கி ரசிகர்களை தனது பக்கம் கட்டி இழுப்பார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில்  மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சிகளில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது  விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும்  பிக் பாஸ் ஆறாவது சீசனிலும் மகேஸ்வரி கலந்து கொண்டுள்ளார். இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஐந்து சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதனால் இந்த ஆறாவது சீசன் மிகப்பெரிய வரவேற்பு பெருமை எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இந்த சீசனில் பல புது முகங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அப்படிதான் மகேஸ்வரி இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது இவர் நல்ல தொகுப்பானியாக மட்டுமல்லாமல் நல்ல மாடலாக இருக்கிறார் இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் போட்டோ சூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார் அப்படி பல புகைப்படங்கள் ரசிகர்களிடைய மிகவும் பிரபலமடைந்துள்ளது.

தொகுப்பானியாக  மட்டுமல்லாமல் சீரியல்களிலும் மகேஸ்வரி நடித்த வந்தார் ஆனால் சினிமா உலகிற்கு வந்தவுடன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது இந்த நிலையில் மகேஸ்வரி ஒரு பேட்டியில் கூறிய பொழுது. நான் மீடியாவில் நுழைந்தவுடன் சில காலங்களிலேயே எனக்கு திருமணம் முடிந்து விட்டது அப்பொழுது திருமணம் பற்றி புரிதல் இல்லாமலேயே எனக்கு இருந்தது.

அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் மனம் பொருத்தம் இல்லை சில வருடங்களிலேயே பிரிந்துவிட்டோம் அதன் பிறகு எனது மகனை நானே பார்த்துக்கொள்கிறேன். என அந்த பேட்டியில் மகேஸ்வரி கூறியிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது மகேஸ்வரியின் முன்னாள் கணவர் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

maheshwari
maheshwari