திரையுலகில் நடிகர், நடிகைகள் வந்து போவது உண்டு ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகின்றனர் இதனால் அவர்கள் மறைந்த பிறகும் அவர்களைப் பற்றிய புகழ்ந்து பேசுவது அல்லது அவர்கள் சினிமா பீல்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களை பற்றி பேசுவார்கள்.
அப்படி ஒரு நடிகை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாரதிராஜா, நடிகர் கமல் போன்ற நடிகர்களை வியக்க வைத்துள்ளார் அவர் குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இயக்குனர் பாரதிராஜா நடிகர் கமலை வைத்து 16 வயதினிலே படத்தை தொடர்ந்து சிகப்பு ரோஜா என்னும் படத்தை எடுத்தார்.
இந்த படத்தில் அறிமுக நடிகையாக வடிவுக்கரசி நடித்திருந்தார் அதற்கு முன் வடிவுக்கரசி கன்னிமாரா ஹோட்டலில் வரவேற்பு அறையில் பணியாளராக வேலை பார்த்து வந்தாராம் இந்த படத்தில் ஒரு ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வடிவுக்கரசி பற்றி பாரதிராஜா சொன்னது என்னவென்றால்..
தான் சொல்லாத வசனங்களை கூட சூட்டிங் ஸ்பாட்டில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார் உதாரணமாக அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகை வடிவுக்கரசியிடம் சிகரெட்டை காட்டி ஆஃபர் பண்ணுவார் கமல் அப்பொழுது வடிவுகரசி அதை சாதாரணமாக வாங்கி பிடிக்கப் போவாராம்.
ஆனால் அது சீனிலேயே இல்லை தைரியமாக அவரே செய்தார் என பாரதிராஜா கூறினார் இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் கமல் பாரதிராஜாவிடம் நடிகை வடிவுக்கரசியை குறிப்பிட்டு இந்த பொம்பளை எல்லோரையும் சாப்டுட்டு போயிருவா சினிமாவில் ஒரு கலக்க கலக்கப் போகிறார் பாருங்கள் என சொன்னாராம். இதனை இயக்குனர் பாரதிராஜா பேட்டியில் கூறினார்.