தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருக்கும் சிம்பு. இவர் அவ்வபோது பிரச்சனை மற்றும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். அதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக நடித்த மாநாடு வந்து தணிந்தகாடு போன்ற படங்கள் பெரிய வெற்றி..
பெற்ற நிலையில் இன்னொறு வெற்றி கொடுக்க கிருஷ்ணாவுடன் கைகோர்த்து பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் படத்தில் செண்டிமெண்ட் சீன்களும் இருக்கின்றன.
இதனால் வெற்றி நடை கண்டு வருகிறது. நல்ல வசூலையும் அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், சென்ராயன், பிரியா பவானி சங்கர், அனுசித்ரா, கலையரசன் மற்றும் பல பிரபலங்கள் கொடுக்கப்பட்ட கதாபத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளனர். இந்த நிலையில் சிம்பு குறித்து தகவல்கள் வெளி வருகின்றன.
பொதுவாக சிம்பு மேடைகளில் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் தன்னை வளரவிடாமல் தடுக்கிறார்கள் என கூறிக் கொண்டே வருகிறார் இந்த நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அவர்களிடம் ஒருவர்.. சிம்பு ஒரு ஒவ்வொரு விழா மேடையிலும் தன்னை யாரோ சூழ்ச்சி செய்து வளர விடாமல் தடுக்கிறார்கள் என பொருள் வைத்து பேசுகிறாரே.?
உண்மையாகவே கோலிவுட்ல யாராவது அப்படி நினைக்கிறார்களா இல்லை அவரே sympothy வரவேண்டும் என்று பேசுகிறாரா என கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன்.. சிம்பு ஏதிராக இந்த சினிமா உலகிலேயே யாரும் சதி செய்வதாக எனக்கு தெரியவில்லை அது ஒரு பிரம்மை என்று தோன்றுகிறது சிம்பு ஒரு மிகச் சிறந்த நடிகர் அவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகள் எல்லாம் அவருக்கே நன்றாக தெரியும் அதை அவரும் முழுவதுமாக கலைத்து விட்டார் என்றார் அவரது இமாலய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.