டிஆர்பி-யில் சக்கை போடுப்போடும் முன்னணி நடிகர்களின் படங்கள்.! நம்பர் ஒன் யார் தெரியுமா.?

AJITH-VIJAY
AJITH-VIJAY

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியினை தந்து வரும் பல படங்கள் அதேபோல் டிஆர்பியில் மிகப்பெரிய சாதனை படைத்து வரும் நிலையில் தற்போது யார் டிஆர்பியில் நம்பர் ஒன்  என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கோடி கணக்கில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இவ்வாறு பாக்ஸ் ஆபீஸ் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் டிஆர்பியும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தயாரிப்பு நிறுவனங்களை விட அந்த நடிகர்களின்  ரசிகர்கள் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காமித்து வருகிறார்கள். அப்படி விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காமித்து வருகிறார்கள். இதனை அடுத்து ஒரு புறம் டிஆர்பியில் யார் நம்பர் ஒன் என்பதை பற்றிய தகவலும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது. இதனைத் தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்றது.

இவ்வாறு டிஆர்பி-யில் தற்பொழுது மாபெரும் வெற்றினை பெற்ற விக்ரம் திரைப்படம் முதன்முறையாக டிவியில் ஒளிபரப்பாகி நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது. அதே சமயத்தில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. என்னதான் விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்றிருந்தாலும் டிஆர்பியில் விஜயின் பீஸ்ட் படம் தான் முன்னணி வகித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 திரைப்படமும் டிஆர்பியில் மூன்றாவது இடத்தினை பிடித்திருக்கும் நிலையில் பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த பல வருடங்களான அருணாச்சலம், பாட்ஷா போன்ற படங்கள் கூட டிஆர்பியில் சக்கை போடு போட்டு இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. இவ்வாறு தற்பொழுது டிஆர்பியில் ரஜினி, விஜய் படங்களுக்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.