இந்த ஆண்டு தமிழ் சினிமா நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கும் அதே தான் ஏனென்றால் இவர் இயக்கத்தில் நடிப்பில் உருவான லவ் டுடே திரைப்படம் வெளிவந்து வெற்றி நடை போட்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க காமெடி, செண்டிமெண்ட், காதல் என அனைத்தும்..
கலந்த ஒரு படமாக உருவாகியிருந்தது. அதே சமயம் இந்த படத்தில் இந்த காலகட்டத்திற்கு தேவையான சில கருத்துக்களை எடுத்துரைத்தது அதனால் ரசிகர்களுக்கு, மக்களுக்கும் ரொம்ப பிடித்து போயின. இந்த படத்தை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர்..
தமிழை தாண்டி மற்ற இடங்களிலும் இந்த படத்திற்கான வரவேற்பு நன்றாக இருந்து வந்துள்ளன. அதன் காரணமாக இந்த படத்தின் வசூல் நன்றாகவே அள்ளி உள்ளது முதல் நாளில் நான்கு கோடிக்கு மேல் வசூல் அள்ளியது அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தியது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே..
இந்த திரைப்படம் முப்பது கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை ivana போன்றவர்கள் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்பொழுது அவர்களிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக பிரதீப் ரங்கநாதனுக்கு பிடித்த நடிகை யார் என்பது குறித்து கேள்வி கேட்டனர் அதற்கு அவர் பதில் கொடுத்தது எனக்கு பிடித்த நடிகை வேறு யாரும் அல்ல சமந்தா தான் என கூறினார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.