சினிமா உலகில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க ரொம்பவும் போராடுகின்றனர் அந்த வகையில் நடிகர் ஜெய் சினிமா உலகில் தனது பயணத்தை பகவதி படத்தின் மூலம் தொடங்கினார். அப்பொழுது இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு சூப்பரான படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தாலும்..
இவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. மேலும் அண்மை காலமாக நடிகர் ஜெய் நடிக்கும் படங்களும் பெரிய வெற்றி ருசிக்காமல் இருப்பதால் அவரது மார்க்கெட்டு ஏறாமல் இருப்பதாக கூறப்படுகிறது இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எண்ணி துணிக, பட்டாம்பூச்சி போன்ற படங்கள்..
பெரிய அளவில் வெற்றியை தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார் ஜெய் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என சொல்லுங்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் பதிலும் கொடுத்துள்ளார். நடிகர் ஜெய்.. விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தின் மூலம் நடித்து அறிமுகமானார். இவரை பலரும் குட்டி விஜய் என கூப்பிடுவது வழக்கம் ஆனால் அவர் ரேஞ்சே வேற.. என்ன இப்படி கூப்பிடாதீர்கள் என பல தடவை ஜெய் கூறி இருக்கிறார். மேலும் விஜய் உடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல அஜித்துடனும் நல்லா பேசி பழகி உள்ளார் ஜெய் இப்படி இருக்கின்ற நிலையில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த ஜெய் தனக்கு பிடித்த ஹீரோக்களில் விஜயை ரொம்ப பிடிக்கும். அதேசமயம் நடிகர் அஜித்தையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக கூறியுள்ளார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.