Vidaamuyarchi : நடிகர் அஜித் குமாரின் 62 வது திரைப்படமான (விடாமுயற்சி) நீண்ட நாட்களாக இழுப்பரியில் கடந்து வந்த நிலையில் அண்மையில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது…
மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் எடுத்து வருகிறது படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது . அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது அடுத்து அபுதாபி, துபாய் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்த மிலன்..
மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது பலரையும் சோகத்துக்கு உள்ளாகியது குறிப்பாக விடாமுயற்சி படக்குழுவிற்கு இது பெரும் நஷ்டம் ஆகும்.. மிலனின் இறப்பை ஒட்டி விடாமுயற்சி பட சூட்டிங் கொஞ்சம் நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.
மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய ரெட்ரோ பாடல்கள்.! அடேங்கப்பா இத்தனை பாடல்களா
இந்த நிலையில் கலை இயக்குனர் மிலனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விடாமுயற்சி படக்குழு மிலனின் மனைவி மரியா மிலனை கலை இயக்குனராக பணியாற்ற வைக்க உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் தெரியவில்லை ஆனால் சினிமா வட்டாரங்களில் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.