சூது கவ்வும் 2 – விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் தெரியுமா.!

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருப்பவர்  விஜய் சேதுபதி இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

இவர் மக்களுக்கு பிடிக்கும் திரைப்படமாக தான் தற்போதும் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சூது கவ்வும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தைப் பெற்றது என்பது பலருக்கும் தெரியும்.

மேலும் அந்த திரைப்படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ளார் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்,நடிகைகளும் தற்போது சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் சூது கவ்வும் இரண்டாம் பாகம் இயக்க போவதாக கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது இந்நிலையில் இணையதளத்தில் இந்த படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது அந்த தகவல் என்னவென்றால் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த தகவல் விஜய்சேதுபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.