இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான தோனி அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு தற்போது சினிமாவில் பல படங்களை தயாரிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டு வருகிறது. அப்படி இவர் தயாரிக்கப் போகும் தமிழ் படத்தின் ஹீரோ ஹீரோயின் யார் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
முதலில் தமிழில் டோனி அவர்கள் விஜயை வைத்து முதன் முறையாக படம் தயாரிப்பார் என்று கூறி வந்தனர் ஆனால் அது பொய் என்று தற்போது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றனர். அப்போ விஜய் இல்லன்னா வேற யாரை வைத்து படத்தை தயாரிக்கப் போகிறார் தோனி என்று ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு தீர்வளிக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி தினத்தன்று தனது தோனி எண்டர்டெயின்மென்ட் சார்பாக முதல் பெரிய பட்ஜெட் திரைப்படத்தை தமிழில் எடுக்கப் போவதாக தோனி அவர்கள் தெரிவித்து இருந்தார். தோனி அவர்கள் தயாரிக்கப் போகும் இந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாட்சி தோனி தான் கதை எழுதியுள்ளாராம்.
இந்தப் படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தோனி தயாரிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் அவர்கள் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்யப் போவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு தற்போது புது மாப்பிள்ளை ஆக இருக்கும் ஹரிஷ் கல்யாணிக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.