விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் தொடங்கலாமா வேண்டாமா என பயத்தில் தான் ஆரம்பித்தது ஆனால் ஆரம்பித்த உடனேயே மக்கள் சப்போர்ட் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் கிடைத்ததால் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிய தோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த சீசன்களும் தொடங்கப்பட்டது.
இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த சீசனும் அதாவது 6வது பிக்பாஸ் சீசன் விஜய் டிவியில் தொடங்கப்பட இருக்கிறது. கடந்த ஐந்து சீசன்கள் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்த நிலையில் அடுத்த சீசன் யார் தொடங்குவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏனென்றால் அண்மையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது இந்த நிகழ்ச்சியை சிம்பு வெற்றிகரமாக முடித்தார். பிக்பாஸ் 6வது சீசனில் கமல் தொகுப்பாளராக இருப்பாரா அல்லது சிம்பு, சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் ஆகியவர்களின் பெயர்களும் இடம் பெறுகின்றன.
அதனால் யார் பிக்பாஸ் 6வது சீசன் தொகுப்பாளராக இருப்பார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் ஒரு புதிய படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார்.
இதனால் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கமல் தொகுப்பாளராக பணியாற்றுவதும் ஒரு கேள்விக்குறியாக இருந்ததாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது அதாவது ஆறாவது சீசனை உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என சொல்லப்படுகிறது.