நடிகர் விஜய குமாரின் மகன் அருண் விஜய் தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் சினிமாவுல ஹீரோவாக நடிக்கும் பொழுது இவரது வயது 17 என குறிப்பிடப்படுகிறது அந்த வயதிலேயே சினிமாவுலகில் நடிக்க ஆரம்பித்ததால் கதை களத்தை சரியாக தேர்வு செய்யாமல் நடித்ததனால் இவரது ஆரம்பத்திய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன
அதன் காரணமாக சினிமா உலகில் ஒரு கட்டத்திற்கு மேல் காணாமல் போனார். இருப்பினும் சினிமா மீது அதிக ஆசை இருந்ததால் தொடர்ந்து அவ்வபொழுது தலைக்காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த படத்திற்காக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடித்தார்.
விக்டர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின. அருண் விஜய் தடம், குற்றம் 23 போன்ற சிறந்த படங்களில் நடித்து ஓடினார். அண்மையில் கூட நடிகர் அருண் விஜய் ஹரி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து யானை படத்தில் நடித்தார்.
இந்த படம் தற்பொழுது உலகம் எங்கும் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அருண் விஜய் கையில் பல்வேறு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன அந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் சினிமா உலகில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை குறித்து விலாவாரியாக பதில் அளித்தார் அப்பொழுது உங்களுக்கு எந்த நடிகர் ரொம்ப பிடிக்கும் என கேட்டுள்ளனர் அதற்கு எனக்கு இப்போ இல்லை எப்பொழுதுமே பிடிக்கும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறினார்.