சினிமா உலகில் திறமை இருப்பவர்கள் எடுத்தவுடனேயே வெற்றியை ருசிப்பார்கள் அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பை படித்திருந்தாலும் அவருக்கு சின்ன வயதிலிருந்து சினிமா உலகில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஒரு வழியாக படிப்பை முடித்துவிட்டு அப்பாவிடம் தனது ஆசையை கூற அவரும் சம்மதித்தார். எடுத்த உடனேயே முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதில் தனது திறமையை வெளிக்காட்டி சூப்பராக நடித்திருந்தார் அதுவும் கார்த்திவுடன் இணைந்த நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் தற்பொழுது திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது படத்தில் அதிதி சங்கரின் நடிப்பு பிரமாதமாக இருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்களும் மக்களும் கூறி வருகின்றனர். அதிதி சங்கருக்கு இது முதல் படம் போல தெரியவில்லை நடிப்பில் அந்த அளவிற்கு பின்னி பெடலெடுத்துள்ளார் என கூறி வருகின்றனர்.
மேலும் அதிதி சங்கருக்கு முதல் படத்திலேயே ரசிகர்கள் எல்லாம் உருவாகி உள்ளனர். விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக கைகோர்த்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இது அதிதி ஷங்கருக்கு இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அதிதி சங்கர் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு ஊடகத்திற்கு இவர் பேட்டி கொடுக்கும் பொழுது உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேட்டுள்ளனர். மனம் திறந்து பேசிய அதிதி சங்கர் சற்றும் யோசிக்காமல் எனக்கு நடிகை சமந்தாவை தான் பிடிக்கும் என கூறினார். இதனால் நடிகை சமந்தா ரசிகர்கள் இளம் நடிகை அதிதி சங்கருக்கு பாராட்டுக்களை கொடுத்து வருகின்றனர்.