தமிழ் சினிமாவில் அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து அஜித்தை கொண்டாடுவதால் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அவர் வைத்திருக்கிறார். ரசிகர்கள் தனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அஜித்தும் சமீப காலமாக சிறந்த இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த விசுவாசம், நேர்கொண்டபார்வைபோன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது சிறப்பான கதைகளை இயக்கிவரும் வினோத்துயுடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஆக்சன் மற்றும் குடும்ப அதை படமாக இருக்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் அஜீத் இணைய உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர். சமீப காலமாக நாம் அஜித்தை பற்றி தெரிந்து வந்தாலும் அவரது ரசிகர்கள் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவர்களது குழந்தைகளை பற்றியும் தெரிந்து கொள்கின்றனர்.
மேலும் புகைப்படங்களும் வெளியாவது வழக்கம் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் மகன் ஆத்விக் காரில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி உள்ளது அவரைப் பார்க்க அவரது மாமா ரிச்சர்ட் ரிஷி திடிரென வந்துள்ளார்.
அப்பொழுது இருவரும் கண்ணாடி முன்பு முத்தம் கொடுத்துக் கொள்ளும் படியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.