திரை உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு சிறந்த இயக்குனர்கள் எப்போதும் தேவைப்படுவது அவசியம். அந்த வகையில் நடிகர் சூர்யாவுக்கு பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து அவரை வேற லெவல் இல் எடுத்துச் சென்றவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் கௌதம் மேனன்.
சூர்யாவும், கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து நாம் அனைவரும் அறிந்தது தான்.அதன் பின்பு சூர்யாவின் சினிமா வாழ்க்கையை வேற லெவலுக்கு உச்சத்தை அடைந்து அந்த வகையில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் எல்லாம் செம ஹிட் அடித்தோடு மட்டுமில்லாமல் தீவிர ரசிகர் பட்டாளமும் அதிக அளவு உருவாகியது.
அதன்பிறகு கௌதம் மேனன்னுக்கும், சூர்யாவுக்கும் நல்ல புரிதல் ஏற்ப்பட்டது. அதை தொடர்ந்து கௌதம் மேனன் புதிய கதையை உருவாக்கினால் உடனடியாக சூரியாவிடம் கூறுவது வழக்கம் அப்படி சில வருடங்களுக்கு முன்பு சூர்யாவிடம் கௌதம் மேனன் ஒரு புதிய கதையை கூறியுள்ளார்.
முழு கதையையும் கேட்டு விட்டு பின் சூர்யா இந்த கதை சரியில்லை என கூற கௌதம் மேனன் அந்த கதையை தனுஷிடம் கூறினார். தனுஷ் படத்தின் கதையை கேட்டுவிட்டு நடிகர்கள் என கூறினார் படம் உருவாகி என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற பெயரில் வெளியானது.
பல பிரச்சனைகளைத் தாண்டி இந்த படம் வெளியாகியது இருபின்னும் மக்கள் மத்தியில் சுமாரான வரவேர்ப்பையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.