விஜய் டிவி தொலைக்காட்சியில் சீசன் சீசன் ஆக பிக் பாஸில் எழுச்சி நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று பிக்பாஸ் 7கோலாகலமாக தொடங்கி உள்ளது. முதல் போட்டியாளராக காமெடி நடிகர் கூல் சுரேஷ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
வீட்டுக்கு உள்ளே போவதற்கு முன்பாகவே பிக் பாஸ் செவன் ஏழு உள்ளே போறது ஒரு ஏழரை என சொல்லி அசத்தினார்.அதனைத் தொடர்ந்து நான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் சிம்பு சந்தானம் என தெரிவித்தார். வீட்டின் உள்ளே போன அவருக்கு கேப்டன் பதவி கொடுத்துள்ளனர்.
மேலும் பிக் பாஸ் அவருக்கு பல அறிவுரைகளை சொல்லி உள்ளது. இரண்டாவது போட்டியாளராக பூர்ணிமா ரவி உள்ளே வந்துள்ளார். இவர் ஒரு youtube பிரபலம் இவருக்கு ஒரு அண்ணா இருக்கிறார் அவருடைய பொண்ணை இவருக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு காரணமே உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் உள்ளே வந்த இவர் நான் சிங்கிள் என அவரே கூறியுள்ளார் அதனால் இவரை யார் துவைத்து எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பூர்ணிமா ரவி அவர்களுக்கு ஒரு விசிலை கொடுத்துள்ளார்கள் அது எதற்கு என்று உள்ளே போனால் தெரியும் என கமல் கூறுகிறார். பூர்ணிமா ரவி கமலை பார்த்து நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க என வழிகிறார். உடனே அப்பா அம்மாவை கட்டி பிடித்துக்கொள்ளலாமா என கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் கமலையும் கட்டிப்பிடித்துக்கலாமா என கேட்க கமலும் கட்டி பிடிக்கிறார்.