சீரியல் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ஆடியோவை வெளியிட்ட VJ சித்ரா!! யார் தெரியுமா அந்த சீரியல் நடிகர் வெளிவந்த புதிய தகவல்.!

vj-cithra
vj-cithra

பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலரும் தற்போது ஆழ்ந்தவருத்தத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பிற்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்தார் பின்பு அவரை அனுப்பிவிட்டு வெகு நேரமாகியும் கதவை திறந்து பார்த்தால் தூக்கு போட்டு சித்திரா சடலமாக இருந்தார்.

இவர் முதலில் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியது பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவர் இறந்த விஷயம் சின்னத்திரை பிரபலங்கள் பலரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது மட்டும்மல்லாமல் தன்னோடு இருந்த நினைவுகளை அவ்வப்போது சின்னத்திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சித்ரா ஒரு நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ஆடியோவாக பேசிய அனுப்பி உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

சித்ரா பிரபல சீரியல் நடிகர் மதனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி அவருக்கு ஆடியோ வெளியிட்டுள்ளாராம் சித்ரா இழப்பை தாங்க முடியாமல் மதனும் அந்த ஆடியோவை வெளியிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

சித்ராவின் கொலைக்கு பின்னால் என்ன மர்மம் இருக்கிறது என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

vj cithra
vj cithra