பார்ட் 2 திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்கு முதலில் கொண்டு வந்தது யார் தெரியுமா.? அப்புறம் தான் ரஜினி, அஜித் எல்லாம்.

actors
actors

சினிமா உலகை பொறுத்தவரை ஒவ்வொரு  மொழி சினிமாவும் தனக்கு ஏற்ற மாதிரி  தான் படத்தை எடுத்து வருகிறது ஆனால் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களையே அதிக அளவில் காப்பி அடித்து வருகிறது தமிழ் சினிமா. ஹாலிவுட்டில் தான் ஒரு படம் ஹிட் அடித்து விட்டால் அதன் அடுத்தடுத்த பாகங்களை ரிலீஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் சமீபகாலமாக டாப் நடிகர்கள் ஒரு படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை ருசித்து விட்டால் அதன் அடுத்த பாகத்தை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன அஜித்தின் பில்லா, பில்லா 2, சூர்யாவின் சிங்கம்1, சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்த பாகங்கள் வெளியாகின.

கமலின் இந்தியன், இந்தியன் 2 என அடுத்தடுத்த பாகங்கள் சினிமாவுலகில் வெளிவர தடையாக இருக்கின்றன. முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தை முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் யார் தெரியுமா அதுவும் கமலஹாசன் திரைப்படம் தான்.

1979ஆம் ஆண்டு ஜி என் ரங்கநாதன் இயக்கத்தில் கமல் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி அசத்திய படம் கல்யாணராமன். இந்த படத்தில் கமல் கல்யாணம், ராமன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் இந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து நான்கைந்து வருடங்கள் கழித்து 1984 ஆம் ஆண்டு முத்துராமன் இயக்கிய திரைப்படம் ஜப்பானில் கல்யாணராமன் பார்ட் 2 படம்.

இப்எதிர்பார்த்த அளவிற்கு அமோக வெற்றியை பெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் பார்ட் 2 படமாக இந்த படம்தான் உருவானதாம் அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் முதல் படத்தை தொடர்ந்து அதன்  இரண்டாவது பாகமும் வெளிவர தொடங்க ஆரம்பித்தாம். சொல்லப்போனால் இரண்டாம் பாகத்திற்கு அடிக்கல் நாட்டியது கமல் திரைப்படம்தான்.